சில நடிகைகள் முக்கியமான பெரிய நடிகர்கள் கூட நடிச்சிட்டு சில வருஷம் காணாமல் போய் திரும்ப ரீ-என்ட்ரி கொடுப்பாங்க.
அப்படி தமிழ்ல சில படங்கள் நடிச்சுட்டு அதன் பிறகு தென்றல் என்ற சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தவங் தான் நடிகை ஸ்ருதிராஜ்.
இவரு யாரு..? இவருக்கும் நடிகர் விஜய்க்கும் என்ன உறவுன்னு தான் இந்த பதிவுல பாக்க போறோம். இவர் 27 மார்ச் 1980 இல் சென்னையில் பிறந்தார். இவருக்கு இப்போ 44 வயசு ஆகுது.
இவர் தன்னுடைய ஸ்கூலிங் மற்றும் காலேஜ் இரண்டையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார். தன்னுடைய 15 வது வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படம் ஒன்றில் அறிமுகமானார்.
இந்த படத்துல ஸ்ருதிராஜின் நடிப்பை பார்த்துட்டு நடிகர் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
இந்த படத்தில் ஒரு கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் ஸ்ருதி ராஜ். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு மாணவன் திரைப்படம் தான் நடிகர் விஜய்க்கு.. நானும் ஒரு ஹீரோ தாண்டா.. என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொடக்கத்தை கொடுத்த திரைப்படம்.
இந்த படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பார் நடிகை ஸ்ருதி ராஜ். அந்த நேரத்தில் விஜயும் ஸ்ருதியும் அண்ணன் தங்கை போல பழகி இருக்கிறார்கள். நடிகர் விஜய் ஸ்ருதியை தங்கச்சி என்று தான் அன்புடன் அழைப்பாராம்.
அதேபோல ஸ்ருதியும் விஜய்யை அண்ணா அண்ணா என்று தான் அழைப்பாராம். ஒரு முறை நடிகர் விஜய் என் வீட்டிற்கு சென்று அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
அப்போது அவர், எனக்கு தங்கச்சி இல்லாத குறையை நீ தீர்த்து வைச்சுட்டம்மா.. என்று கூறி இருக்கிறார். எனக்கும் அண்ணன் இல்லாத குறை இருந்தது. விஜய் அன்னைக்கு அப்படி சொன்னதிலிருந்து.. இப்போது வரை விஜயை நான் என்னுடைய சொந்த அண்ணனாக நினைச்சுகிட்டு இருக்கேன்.
அந்த படம் முடிஞ்ச பிறகு அடுத்த அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சும் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக தன்னுடைய சினிமா வாய்ப்புகளை தவற விட்டார் ஸ்ருதி ராஜ்.
ஆனால் தொடர்ந்து நடித்த நடிகர் விஜய் தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுக்கும் சென்றிருக்கிறார்.
அந்த படம் வெளியாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தற்போது என்னை அவருக்கு ஞாபகம் இருக்கிறதா..? என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், தற்போது கூட அவரை எங்கேயாவது சந்தித்து ஒரு தங்கையாக கண்ணீர் விட்டு அழுது பழைய நினைவுகளை அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என பேசி இருக்கிறார் ஸ்ருதிராஜ்.
தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்பை முடித்த பிறகும் ஸ்ருதிராஜுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தன அதனை ஏற்றுக் கொண்டு சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
ஆனால் அந்த படங்கள் எதுவுமே ஸ்ருதிராஜின் வளர்ச்சிக்கு கை கொடுக்காமல் போயிடுச்சு. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஸ்ருதிராஜிற்க்கு 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தென்றல் என்ற சீரியலில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணாக சீரியலின் ஹீரோயினாக நடித்திருப்பார் நடிகை ஸ்ருதி. இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இந்த சீரியலுக்கு பிறகு ஆஃபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ராஜ். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற சீரியலில் மகாலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிராஜ்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.