பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன்.
இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுர்த்தண்டா, கொம்பன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்கள் அனைத்தும் ஹிட்டடித்தன.
நடிகை லட்சுமி மேனன்:
முன்னணி நடிகரான விஜய்சேதுபதிக்கு ஜோடியாக றெக்கை திரைப்படத்தில் நடித்திருந்தார். அஜித்தின் தங்கையாக வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் லட்சுமி மேனனுக்கு சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை.
படவாய்ப்பு இல்லை:
இவர் கடைசியாக முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பொங்கலுக்கு நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன் பின் கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கத்தில் ஏஜிபி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு படம் வெளியானதா, என பலர் கேட்கும் அளவிற்கு படம் வெளியானதே தெரியவில்லை.
விரைவில் திருமணம்:
தற்போது லட்சுமி மேனன் சிப்பாய் என்ற படத்திலும், சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். 27 வயதாகும் நடிகை லட்சுமி மேனன், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை பிரபல நடிகர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாததால், இணையத்தில் பரவி வரும் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
விஷாலுடன் காதல் கிசுகிசு:
நடிகை லட்சுமி மேனன் விஷாலுடன் இணைந்து, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திலும் விஷாலுடன் இவரது கேமிஸ்டிரி பக்காவாக இருந்ததால், இருவரும் காதலிப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், அதன் பிறகு லட்சுமி மேனன் விஷாலுடன் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.