அதில் வெற்றியாளராக அருணா முதலிடத்தை பிடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரியா ஜெர்சன் பிடித்திருந்தார். மூன்றாவது இடம் பிரசன்னாவிற்கு கிடைத்தது.
இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கப்பட்ட பரிசு விவரங்கள் சலுகைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களின் மிகவும் பிரபலமானது என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியின் வெற்றியின் காரணமாக தான் தற்போது ஒன்பதாவது சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசன் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் கலந்து கொண்டிருந்தார். இறுதி போட்டியில் போட்டியாளர்களின் திறமையை பார்த்து ஹரிஷ் ஜெயராஜ் வியந்து போனார். இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலாவது இடத்தை அருணா பெற்றார். அவருக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் 10 லட்சம் பணமும் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்த பிரியா ஜெர்சன் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவருக்கு 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அதுவும் அந்த பரிசு தொகையை இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் தான் வழங்கினார்.
அதுபோல மூன்றாவது இடம் பிரசன்னாவிற்கு கிடைத்தது. சூப்பர் சிங்கரின் பல அசத்தலான பாடல்களை பாடி இருந்த பிரசன்னாவிற்கு குறைவான வாக்குகளை கிடைத்திருந்ததன் காரணமாகவே அவர் மூன்றாவது இடம் கிடைத்திருந்தது. அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
அதுபோல இந்த சீசனின் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டான போட்டியாளர் என்றால் அது பூஜா தான். ஆரம்பத்தில் இருந்தே பூஜாவிற்கு டிஜே பிளாக் செய்த விளம்பரத்தை பார்த்து அவருக்கு எப்படியும் விஜய் டிவி அவார்ட் கொடுத்து விடுவார்கள் என்று ரசிகர்கள் கூறியிருந்த நிலையில் கடைசியில் அவரால் டாப் 3 இடத்திற்குள் வர முடியாமல் போயிருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்கள் சோகமாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.