தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களை இயக்கி இயக்குனராகவும், நடிகராகவும் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ். இவர் அவருடைய திரைப்படங்கள் இல்லாமல் மற்றவர்களுடைய இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய தம்பியை நாயகனாக அறிமுகம் செய்கிறார். எல்வின் நடிக்கும் முதல் திரைப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த டைரி திரைப்படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.
அதே போல் ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா உள்ளிட்ட பாடங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் ஆடி மாசம் தூங்குவதால் படத்திற்கான படப்பிடிப்பு இன்று நடைபெற்று உள்ளது. எல்வின் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதால், அதற்காக நடனம், சண்டை பயிற்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்று வந்துள்ளார் என படக் குழுவினர் கூறுகின்றனர்.