ஏற்கனவே சிவாங்கி தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் தற்போது அது உண்மைதானோ என்று மீண்டும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். முதல் சீசனில் கிடைத்த வெற்றி காரணமாகவே தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் பல மாற்றங்களும் நடைபெற்று இருக்கிறது. இது வரைக்கும் கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி இந்த நான்காவது சீசனில் ஒரு குக்காக மாறி இருக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் அதிகமான சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பு ஏற்படுத்தியது. அதுபோல இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காரணம் இதுவரைக்கும் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த முறை குக் ஆக மாரி இருப்பதால் இந்த சீசனில் டைட்டில் வின்னர் சிவாங்கி தான் என்றும் சிவாங்கிக்காகவே பல டாஸ்க்கள் அவருக்கு வெற்றி பெறுவது போலவே கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆரம்பத்தில் சிவாங்கிக்கு நான்-வெஜ் என்பதால் தான் நான் வெஜ் வைக்கவில்லை என்று ஒரு பிரச்சனை எழுந்தது அதை தொடர்ந்து நான்வெஜ் தொடங்கப்பட்டது.
விஜே விஷால் வெளியேறிய நேரத்திலும் பெரும் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து தான் அடுத்த வாரமே பாகற்காய் டாஸ்க் வைத்து சிவாங்கி அழ வைக்கப்பட்டார் என்றும் சிவாங்கியை செஃப் திட்டியது கூட ரசிகர்களின் கருத்துக்களை மாற்றுவதற்காக தான் என்று கூட செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது சிவாங்கி குக் வித் கோமாளி செட்டில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “
சிவாங்கியின் அம்மா பாடகர் வித்யாசாகர் உடன் மே 7ஆம் தேதி ஒரு ஈவண்டில் பாட இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதில் இப்போது சிவாங்கியும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் அதற்குரிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே சூட்டிங் எடுத்த பிறகு இரண்டு வாரங்கள் கழித்து தான் அது டெலிகாஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் சிவாங்கி இப்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்னும் இரண்டு வாரத்திற்கு சிவாங்கி எலிமினேஷன் ஆவது இல்லை என்று கன்பார்ம் பண்ணி இருக்கிறார்கள்.