விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
புகழ் தன்னுடைய திருமணத்தை திடீரென்று அறிவித்தவது போலவே தற்போது மனைவி நிறை மாத கர்ப்பமாக இருக்கும் வரைக்கும் இந்த ரகசியத்தையும் மறைத்து வைத்து திடீரென்று காலை அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் தொடர்ச்சியாக புகழ் மற்றும் அவருடைய மனைவி பென்சி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலமாக பலருக்கும் பிரபலமான புகழ் ஆரம்ப காலகட்டத்தில் அதிக அளவில் வாய்ப்புகளுக்காக கஷ்டப்பட்டு உள்ளார். கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த புகழ் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக யாருடைய துணையும் இல்லாமல் சினிமா துறையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ஒவ்வொரு இடங்களிலும் வாய்ப்புக்காக பல சோதனைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஆரம்ப காலகட்டத்தில் பெண் வேடமிட்டு பலரையும் மகிழ்வித்து இருந்தாலும் அப்போது கூட புகழுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. எப்போதும் கஷ்டப்படுபவர்கள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டே இருக்க மாட்டார்கள், அவர்களுடைய முயற்சியும் உழைப்பும் இருந்தால் முன்னேறி காட்டுவார்கள் என்பதற்கு உதாரணமாக புகழும் இருந்து வருகிறார்.
ஆனால் அவர் கஷ்டப்பட்ட நேரங்களில் அவருக்கு உதவியவர்களை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெருமையாக பேசவும் புகழ் தவறவில்லை. திரை உலகில் வடிவேலு பாலாஜி போன்ற ஒரு சிலரை தனக்கு மகிழ்ச்சியான நேரங்களில் எல்லாம் கண்ணீர் மல்க புகழ் நினைவுபடுத்தி கொண்டிருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக இவர் பல நேரங்களில் பிறரிடம் அடி வாங்குவது போல நடித்துக் கொண்டிருப்பார். அப்போது கூட ஒரு சிலர் புகழ் இப்படி எல்லாம் நடிக்கிறாரா?? அல்லது உண்மையான கேரக்டரை இதுதானா?? என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் ஒரு முரட்டு சிங்கள் என்கிற போர்வையில் வலம் வந்த புகழ் ரம்யா பாண்டியன் தொடங்கி தர்ஷா குப்தா, பவித்ரா என பலருடனும் இம்பிரஸ் இருக்கின்ற மாதிரி பலருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது இவரை பல ரசிகர்கள் முரட்டு சிங்கிள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம். புகழ் தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும், காமெடி நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவர் தான் ஒரு பெண்ணை காதலிக்கும் விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். தற்போது அதே பெண்ணை காதலித்து திருமணமும் செய்து இருக்கிறார்.இந்த நிலையில் புகழ் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் நல்ல விஷயத்தை போட்டோ சூட் புகைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு உருக்கமான சில வார்த்தைகளையும் பகிர்ந்து இருக்கிறார். அதில் "என்னுடைய வளர்ச்சியின் வழி துணையாய் வந்தவள். இப்போது என்னை என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள். ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை என அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள்.
இனி நீ, இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப் போகிறது என்று நினைக்கும் போது இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. என்னை தகப்பனாகிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். தன்னுடைய திருமண நாள் அன்று சொன்ன மகிழ்ச்சி செய்திக்கு அதிகமான பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி நடிகர்கள் பலரும் வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர்கள் பலரும் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.