சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொண்டாப்படும் இயக்குனர், நடிகர், நடிகை என சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கூட்டணியை கொண்டதுதான் இந்த தங்காலன் படை.
ஸ்டுடியோ கிறீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா ரஞ்சித்தின் நீளம் புரெடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்த படத்தை பா ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதில் பா. ரஞ்சித்துடன் முதல் முறையாக கூட்டணி போடும் நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்திலும், பார்வதி , மாளவிகா மோகனன் என்று பலரும் நடித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம், பா. ரஞ்சித்தின் கூட்டணி எவ்வாறு இருக்கப்போகிறது என்ற ஆர்வம், எப்போது படம் திரைக்கு வரும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளறத்தான் செய்கிறது.
அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒடிங்கிய குரலை தனது திரைப்படத்தின் மூலம் ஓங்கி ஒலிக்க செய்பவர் இயக்குனர் பா. ரஞ்சித் , பிறர் பேச தயங்கும் அரசியலை தயக்கமின்றி தனது வசனங்கள் மூலம் பிரதிபலிக்கக் கூடியவர்.
அவர் தற்போது இயக்கி வரும் தங்காலன் கதைக்களம் 1990- களில் நடக்கும் கதை. கேஜிஎஃப் தோன்றுவதற்கு முன்பு அந்த கேஜிஎஃப் நிலத்தில் வாழ்ந்த, தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதையாகும்.