Paadatha Pattellam - பாடாத பாட்டெல்லாம் - ருத்ரன் வீடியோ சாங் வெளியானது..

post-img

நடன அமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் ராகவா லாரன்ஸ். சினிமாவோடு மட்டும் நின்றுகொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துவருகிறார். இதனால் பலரிடம் பாராட்டையும் பெற்றவர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் மட்டுமின்றி அவரைப் போலவே ராகவேந்திரரின் தீவிர பக்தரும்கூட.

 
 
Rudhran Movies Paadatha Pattellam Video Song Out Now

லாரன்ஸின் அவதாரங்கள்: ஒரு சில பாடல்களில் தலை காட்டிய லாரன்ஸ் அற்புதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் படம் இயக்கிய அவர் முனி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. எனவே முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றார். காஞ்சனா படமானது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் லாரன்ஸே படத்தை இயக்கினார். அடுத்ததாக அவர் இயக்கிய காஞ்சனா 3 தோல்வியை சந்தித்தது.

ருத்ரன்: ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கு பிறகு லாரன்ஸ் இப்போது ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் படம் பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜாக உருவாகியிருப்பது போல் தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

 
 
Rudhran Movies Paadatha Pattellam Video Song Out Now

விமர்சனங்கள்: இப்படமானது அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. ஓரளவு எதிர்பார்ப்போடு வெளியான ருத்ரன் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் தாய் செண்ட்டிமெண்ட் படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி லாரன்ஸின் நடிப்பு படத்தில் நன்றாகவே இருந்ததாகவும், இருப்பினும் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்தது.

பாடாத பாட்டெல்லாம் வீடியோ சாங்: இந்நிலையில் படத்தில் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. ஆடியோ வெளியிடப்பட்டபோதே இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்தப் பாடலின் முழு வீடியோ வெளியாகியிருக்கிறது. ஸ்ரீதர் மாஸ்டர் கோரியோகிராஃபி செய்திருக்கும் அந்தப் பாடலில் ஒவ்வொரு நடன அசைவும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. மேலும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், லாரன்ஸின் நடனம் இன்னும் அப்படியே இருக்கிறது என புகழ்ந்துவருகின்றனர்.

லாரன்ஸின் அடுத்த படம்: லாரன்ஸ் அடுத்ததாக மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரே அந்தப் படத்தை தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

Related Post