#Release: மே 5க்கு ‛குலசாமி'

post-img

சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛குலசாமி'. முன்னாள் டிஜிபி ஜாங்கிட் போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி உள்ளது. விஜய் சேதுபதி வசனம் எழுதி உள்ளார். இந்தப்படம் இன்று(ஏப்., 21) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இதனால் மே 5க்கு பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.

இதுபற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கை : ‛‛ஏப்ரல் 21 ஆம் தேதி குலசாமி படம் வெளியிட திட்டமிடப்பட்டது. உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு 21.04.23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் 05.05.23 அன்று மாற்றப்பட்டுள்ளது''.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விமல் நடித்துள்ள மற்றொரு படமான தெய்வ மச்சான் படம் இன்று வெளியானது.

 

Related Post