பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினியின் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரையில் நடிகையாகவும் தொகுப்பாளனாகவும் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளனி திவ்யதர்ஷினி தற்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடிகையாகவும் நடித்து வருகிறார்.
இடையில் தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி சில மாதங்களிலேயே அவரை விவாகரத்து செய்து மீண்டும் சின்னத்துறையில் பயணிக்க தொடங்கினார்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளியாக பணியாற்றி இருக்கும் இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல்வேறு பிரபலங்களை பேட்டி கொண்டிருக்கும் இவருக்கு பிரபல நடிகை அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
ஒருமுறை முன்னணி நடிகை ஒருவர் இவருடைய காபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கிறார். அப்போது திவ்யதர்ஷினி அணிந்திருந்த உடையும் அந்த நடிகை அணிந்திருந்த உடையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து அந்த நடிகையை திவ்யதர்ஷினியிடம் சென்று இந்த உடையை கழட்டி விடுங்கள். உங்களிடம் வேறு உடை இருந்தால்.. மாற்றிக்கொண்டு வாங்க.. என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்பாராத திவ்யதர்ஷினி இது தனக்கு மிகவும் பிடித்த உடை. ஆனாலும் இதை கழட்டி வேறு உடையை போட சொல்கிறார்களே என்று மனம் நொந்து போனேன் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏன் நடிகையும் தொகுப்பாளினையும் ஒரே மாதிரியான உடையை அணியக்கூடாதா..? யார் அந்த நடிகை என திவ்யதர்ஷினி வெளிப்படையாக கூறலாமே.. என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் நடிகை திவ்யதர்ஷினி யார் அந்த நடிகை என்பதை கூறாமல் உடையை மாற்றிக் கொண்டு வந்து அந்த நடிகையிடம் நல்ல முறையிலேயே பேட்டியை நடத்தி முடித்திருக்கிறார் என்பதுதான் இங்கே விஷயம்.
திவ்யதர்ஷினியின் தொழில் பக்தி இதில் வெளிப்பட்டு இருக்கிறது என ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.