அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சூர்யா, எல்லோருக்கும் சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை இருக்க வேண்டும். ஒருவருக்கு உதவி செய்தால் அது வேர் போல பரவும்.
சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள். பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. கல்வி மூலம் வாழ்க்கையைப் பாருங்கள். வாழ்க்கை மூலம் கல்வியைப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கல்வியே முக்கியம். அகரம் மூலம் பலரது வாழ்க்கை முழுமை அடைவது மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.
நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தியிடம் தளபதி விஜய் பயிலகம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி, ''எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப அருமையான விஷயம். எவ்ளோ பண்ணாலும் இங்க பத்தாது. ஏனா இங்க அவ்ளோ தேவை இருக்கு. விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றார்.