குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா கோகோய் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரீயலிட்டி ஷோ குக் வித் கோமாளி, உலகெங்கிலும் ரீச் கொடுத்துள்ள இந்த ஷோவில் கோமாளியாக சேட்டை செய்பவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகோய்.
அடிப்படையில் டான்சரான இவர் தனது ஆரம்பக் காலகட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, போன்ற பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்தார், இதை தொடர்ந்து நடனத்தில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு "குக் வித் கோமாளி" ஷோவில் கோமாளியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
CWC முதல் சீசனில் இருந்தது தற்போது வரை கோமாளியாக பயணிக்கும் சுனிதாவுக்கு ரசிகர் எக்கச்சக்கம் இந்த ஷோ அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம். இப்படி தனது கரியரில் முக்கியக்கட்டத்தில் இருக்கும் சுனிதா தற்போது விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த Luxury Hybrid சொகுசு காரின் விலை 60 லட்சமாம், காருடனான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுனிதாவுக்கு அனைவரும் வாழ்த்து மலையை கொட்டி வருகின்றனர்.