ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் அறிமுகமான நளினி, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார்.
ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி.
நடிகை நளினி: திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த நளினி, விவாகரத்திற்கு பின் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த கிருஷ்ணதாசி என்ற சீரியலில் நடித்தார். அதன்பின்,சின்னத்திரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, கோலங்களில் நடித்து வந்த நளினி, ஜெயம் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் நுழைந்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்கூல் பீஸ் கட்ட முடியால: நடிகை நளினி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சினிமாவிற்கு வந்தது குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அதில் நானும் அவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதும் குடும்பத்தை சமாளிப்பது சிரமமாக இருந்தது. அப்போது என் இரண்டு குழந்தைகளும் பெரிய ஸ்கூலில் படித்துக்கொண்டு இருந்தனர். என்னால ஸ்கூல் பீஸ் கட்ட முடியாததால் என் இரண்டு குழந்தைகளும் கோபிலா மடத்தில் சேர்ந்து படித்தார்கள்.
அவர்களின் சம்பளம் கூட தெரியாது: இங்கு நல்ல படிச்சி இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் அருண்,அருணாவின் அம்மா என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்று படிபடி என்று ஹிட்லர் மாதிரி அடிப்பேன். இப்போது அவர்கள் நல்ல வேலையில் அவர்களின் சம்பளம் கூட எனக்கும் தெரியாது. நாங்கள் மூவரும் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்றார்.
குண்டா இருக்க பிடிக்கும்: மேலும், எனக்கு குண்டா இருக்கிறது ரொம்ப பிடிக்கும். மேலும், என் பையன், அம்மானா இப்படித்தான் இருக்கணும், நீ ஹீரோயின் ஒல்லியா இருந்த காலமெல்லாம் போயிடுச்சு, எனக்கு இருந்த போதும், நீ நல்லா சாப்பிட்டு நல்லா இரு மா என்பார் இதனால், நான் ஸ்டீராய்டு போட்டுத் தான் என் உடம்ப குண்டாக்கினேன் என்று கூறியிருந்தார்.