நடிகை அனு சித்தாரா தற்போது தமிழ், மலையாளம் என பிஸியான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், வெளியான நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் இவர் பற்றி பலரும் அறிந்திடாத விஷயம் இவருடைய திருமணம் தான்.
முஸ்லிம் அப்பா-வுக்கும், இந்து அம்மாவுக்கும் பிறந்த இவர் தன்னுடைய பள்ளிக்கால காதலாரான விஷ்ணு பிரசாத் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு தன்னுடைய 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த பிறகு தான் இவருக்கு பட வாய்புகள் குவிய ஆரம்பித்தது. அந்த நேரத்தில், அனு சித்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் கரு கலைந்து விட அடுத்தடுத்து நாட்களில் உடல் எடை கூடி குண்டாகி போனார். ஆனால், இதனை அனு சித்தாரா மறுக்கிறார்.