தமிழ் சினிமாவின் மிக பெரிய பொக்கிஷம் வடிவேலு என்றே சொல்லலாம். பரபரப்பான இந்த உலகில் வேலை முடிந்து டயர்டாக இறுக்கமான மனதுடன் வீடு திரும்பும் மக்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது காமெடி நிகழ்ச்சிகள் தான். அந்தவகையில் காமெடி நடிகர் வடிவேலுவின் பங்களிப்பு மிகப்பெரியது.
காலையில் வேலை சென்று மாலையில் வீடு திரும்பும் மக்களை மகிழ்விக்கும் வடிவேலுவின் காமெடி ஒவ்வொன்றும் எத்தனை முறை பார்த்தாலும் விழுந்து விழுந்து வயிறு வலிக்க சிரிக்க தூண்டும். தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளனர்.
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக வலம் வந்த வடிவேலு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் திரையில் தென்படாமல் இருந்தாலும் வடிவேலுவின் எவர்க்ரீன் காமெடிகள் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு மக்களை மகிழ்வித்து வந்தார்.
அதேபோல் நெட்டிசன்களும் வடிவேலுவின் ரியாக்சன், டயலாக் உள்ளிட்டவைகளை மீம்ஸ்களாக சோசியல் மீடியாக்களில் பயன்படுத்தி வந்தனர். திரையில் ஆக்ட்டிவாக இல்லாத நேரத்திலும் மக்களை மகிழ்வித்த வடிவேலுவின் தடை காலம் முடிந்து மீண்டும் சினிமாவில் கம் பேக் கொடுத்தார்.
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு ஹீரோவாக 'நாய் சேகர் ரிடேர்ன்ஸ்' என்ற படத்தில் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார். மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றாதே கொடுத்தது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் வடிவேலு தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். இப்படத்தின் மெகா வெற்றிக்கு வடிவேலுவின் நடிப்பு உறுதுணையாக இருந்தது.