விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ஹம் சொல்றியா ஷூம் சொல்றியா நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரோஜா ஸ்ரீ. தற்போது இவரின் இன்ஸ்டா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Courtesy: instagram
திருச்சியை சேர்ந்த ரோஜா ஸ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ஹம் சொல்றியா ஷூம் சொல்றியா நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரோஜா ஸ்ரீ-யும், டிஜே பிளாக்கும் சேர்ந்த செய்த லூட்டி விஜய் டிவி ரசிகர்கள் மற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Courtesy: instagram
இதைத்தொடர்ந்து இருவரையும் இணைந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தன. இதன் மூலம் பிரபலமான ரோஜா ஸ்ரீ இணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறிவிட்டார்.
Courtesy: instagram
ரசிகர்களோ ஹம் சொல்றியா ஷூம் சொல்றியா நிகழ்ச்சியை பார்க்கிறார்களோ இல்லையோ ரோஜா ஸ்ரீயின் அழகை ரசிப்பதற்கென்று ஒரு தனி கூட்டமே உள்ளது. அந்தவகையில் ரோஜா தற்போது சின்னத்திரையில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
Courtesy: instagram
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல் தொடரில் முக்கிய கத்பாத்திரத்தில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைத்து தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய ரோஜா தற்போது சின்னத்திரையில் முக்கிய வேடத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
Courtesy: instagram
சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் ரோஜா சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்து வருகிறார்.
Courtesy: instagram
இந்த நிலையில் ரோஜாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.