நான் ஒரு படம் எடுக்க 4 படங்களின் உதவி தேவைப்படுகிறது..! இயக்குனர் அட்லி ஓப்பன் டாக்..!

post-img

இயக்குனர் அட்லி இதுவரை ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார் ஐந்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக சாதனைப்படுத்தப் படங்கள் என்று கூறலாம்.


ராஜா ராணி, தெரி, மெர்சல், பிகில் தற்போது ஜவான் என மொத்தம் ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் அட்லி.


இந்த ஐந்து திரைப்படங்களுமே நல்லா வரவேற்பு பெற்று இருக்கின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குனர் அட்லி பல்வேறு படங்களில் ஹிட்டான காட்சிகளை எடுத்து அதற்கு ஒரு திரை கதையை அமைத்து படத்தை எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.


கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்கள் அதில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட காட்சிகள் ஆகியவற்றை ஒன்றாக தொகுத்து அந்த காட்சிகளை இணைக்கும் விதமாக திரை கதையை அமைத்து படத்தை முடித்து விடுகிறார் அட்லி.


இதனால் தான் அவருடைய படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுகின்றன என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க திரைப்படங்களில் வேறு என்ன காட்ட முடியும் நாம் எதை எடுத்தாலும் அதை ஏற்கனவே வேற யாராவது எடுத்து வைத்திருப்பார்கள். இசை என்றால் ஏழு ராகம் தான் அதை தாண்டி எதையும் செய்ய முடியாது.


அதேபோலத்தான் சினிமாவுக்கும் சில வரம்புகள் இருக்கிறது. அதை தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் அட்லீ.


சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர். ஆம் நான் நிறைய படங்களை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். நான் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்றால் நான்கு திரைப்படங்களின் உதவி எனக்கு தேவைப்படுகிறது என்று பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்களுக்கு மத்தியில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

 

Related Post