வேறு எந்த யூடியூப் விமர்சகர்களும் கடந்த சில வாரங்களாக ஜெயிலர் படத்தை இப்படி நெகட்டிவ் ப்ரமோஷன் செய்திருக்க மாட்டார்கள் என்றும் ரஜினிகாந்த் ஹேட்டர்களிடம் இருந்து ஹெவியான அமவுண்ட் வந்து விட்டதா என ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை ட்ரோல் செய்து வருகின்றனர்.
பெரிய ஹீரோக்களின் புதிய படங்கள் வந்தாலே நம்ம சின்ராசை கையில் பிடிக்க முடியாது என்பது போல ப்ளூ சட்டை மாறன் தனது அலப்பறையை ஆரம்பித்து விடுகிறார்.
1000 கோடி வடை ரெடி:
ஜெயிலர் படம் சுமார் 4000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனுக்கே படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து விடும் என்கிற பயம் வந்து விட்டது போல, உடனடியாக 50 கோடி, 100 கோடி, 500 கோடி, 1000 கோடி வடைகளை சுட ஆரம்பிச்சுடுவாங்க என விரக்தியின் உச்சத்துக்கே சென்று பதறிப் போய் இப்படியொரு போஸ்ட்டை போட்டுள்ளார் என சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ரஜினி சோறு கூட போடல:
1. என் மகளின் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு ரசிகர்கள் வரவேண்டாம். ஒருநாள் மணமக்களை உங்களுக்கு நானே அறிமுகம் செய்கிறேன். விருந்தும் அளிக்கிறேன்.
2. மதுரை ரசிகர்களுக்கு கறிசோறு போட ஆசை. ஆனால் இது சைவ மண்டபம் (அருகில் வேறு மண்டபம் அல்லது ஹோட்டலை புக் செய்து விருந்து போட்டிருக்கலாமே).
தமிழ் சினிமாவில் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உணவளித்தது இரண்டு வள்ளல்கள் மட்டுமே. மக்கள் திலகமும், கேப்டனும்." என லேட்டஸ்ட்டாக ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கறி சோறு கூட போடலை என்கிற நிலைக்கு அடிமட்ட ரேஞ்சுக்கு இறங்கி ட்வீட் போட ஆரம்பித்து விட்டார்.
நெகட்டிவ் விமர்சனம் கன்ஃபார்ம்: தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இந்த அளவுக்கு கழுவி ஊற்றுகிறார் என்றால் எதிர் அணியிடம் இருந்து ஹெவியான காசை வாங்கி விட்டார் போல என ரஜினி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், கண்டிப்பாக ஜெயிலர் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் தான் கொடுக்கப் போகிறார் என்பது கன்ஃபார்ம் அந்த பக்கமே போயிடக் கூடாது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.