தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படமென்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் என இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகியிருந்தன.
தற்போது விஷ்ணு விஷாலுடன் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் இதுவரை வெளியாகாமல் இருக்கின்றன.
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் பிரபல முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.