ஆட்டுக்கறி, கோழிக்கறி.. விருந்து போட்ட விஜயகாந்த்.. கண்ணீருடன் தொண்டர்கள்

post-img

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 71 வயது ஆகிறது.. ஒவ்வொரு வருடமும் தன்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்தவகையில், இன்றைய தினமும் தன்னுடைய தொண்டர்களுடன் சேர்ந்தே பிறந்தநாளை கொண்டாடினார்.. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், விடிகாலை முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள்.. விழா மேடைக்கு சரியாக காலை 11 மணி அளவில் விஜயகாந்த் வந்தார்.. அப்போது தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

வழக்கம்போல், வெள்ளை சர்ட், வெள்ளை வேட்டி, விபூதி கூலிங்கிளாஸ் சகிதம் விஜயகாந்த் வந்திருந்தார். அப்போது அவரை பார்த்ததுமே தொண்டர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்து முழக்கமிட்டனர். சிலருக்கு கண்களில் நீர் சுரந்தது. விஜயகாந்த் அவர்களுக்கு கைகளை உயர்த்தி காட்டினார்.. பிறகு 2 கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னார். அப்போது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

குஷியில் தொண்டர்கள்: காரணம், 2 நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு என்று திடீரென செய்திகள் பரவிவிடவும், தேமுதிக தொண்டர்கள் டென்ஷனாகிவிட்டனர். கட்சி பொருளாளர் பிரேமலதா, அவர் நலமுடன் இருப்பதாக, விளக்கம் தந்திருந்தபோதிலும், இன்று நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான், கோயம்பேட்டில் காலையிலேயே குவிந்துவிட்டனர் விஜயகாந்தின் பாசமிகு தொண்டர்கள்..!!!

விஜயகாந்த்: விஜயகாந்தை நேரில் பார்த்த பிறகுதான், தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். கட்டை விரலை காட்டி தம்ப்ஸ் அப் சிக்னல் காட்டியதுமே, தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.. சிலர் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வடித்தபடியே நின்றனர்.. சிலருக்கு பேச்சே வரவில்லை.. மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டனர்.. இறுதியில், விஜயகாந்த்துடன் போட்டி போட்டுக் கொண்டு போட்டோக்களை எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

முன்னதாக, பிறந்தநாளையொட்டி இன்று காலையிலேயே டிபன் தயாரானது.. இன்னொரு பக்கம் கட்சி அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் இட்லி, பொங்கல் வடை பரிமாறப்பட்டது.. மதிய உணவுக்கு, மீன் குழம்பு, கோழி கறியுடன் ஆட்டுக்கறி விருந்துடன் சுடச்சுட சாப்பாடு பரிமாறப்பட்டது.

காரணம், பல்வேறு மாவட்டங்களிலிருந்து விஜயகாந்த்தை பார்ப்பதற்காக மக்கள் திரண்டு வந்ததால், அவர்களுக்காக இந்த உணவு தயாரானது.. மிகப்பெரிய அளவில் பந்தல்கள் போடப்பட்டன.. பெரிய பெரிய அண்டாக்களில் சமையல்கள் நிரப்பி நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

இனிப்புகள்: தொண்டர்களும், நிர்வாகிகளும், வரிசையாக வந்து சாப்பிட துவங்கினர்.. அவர்களுக்க இலை போடப்பட்டு, அதில் இனிப்புகள் பரிமாறப்பட்டன.. டிபன், கறி விருந்து என பரிமாறப்பட்டது. இதில், தனி கின்னங்களில் ஆட்டுக்கறி குழம்பை, இலைகளில் தொண்டர்களுக்கு பரிமாறப்பட்டு கொண்டேயிருந்தது.. சுடச்சுட விருந்தினை வயிறு நிறைய சாப்பிட்ட தொண்டர்கள், விஜயகாந்த்தை மனம் நிறைய வாழ்த்துவிட்டு போனார்கள்.


Related Post