தமிழ், தெலுங்கு என சில படங்களே நடித்தாலும் ரசிகர்களை தக்க வைத்து கொள்ளும் திறமை நடிகைகளுக்கே உரித்தானதாகும். அவர்கள் நடித்து கிடைக்கும் பிரபலத்தை தங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து தக்க வைத்து கொள்கிறார்கள். இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.
Courtesy: Instagram
வாரிசு நடிகையாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, தமிழியிலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் ஷிவாத்மிக்கா. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்க பட்டுவருகிறது.
Courtesy: Instagram
பிரபல தெலுங்கு நடிகர், ராஜசேகர் வரதராஜன் மற்றும் நடிகை ஜீவிதா ராஜசேகரின் மூத்த மகள் ஷிவானி, அவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு படத்தின் மூலம் தமிழில் நடித்தார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார்.
Courtesy: Instagram
அவரை தொடர்ந்து தற்போது அவரின் தங்கையான ஷிவாத்மிக்காவும் கதாநாயகி நடிக்க தொடங்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “டொரசனி” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
Courtesy: Instagram
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்தி நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நித்தம் ஒரு வானம், படத்தில் அசோக் செல்வன் நடிப்பில் அவரது கற்பனையில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.
Courtesy: Instagram
இந்த படத்தில் நடிகைகள் பலர் முக்கிய வேடத்தில் நடித்தார்கள். படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தது. இதன் மூலம் ஷிவாத்மிகாவிற்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. அவர் மேலும் பட்சதந்திரம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
Courtesy: Instagram
இவர் தெலுங்கில் “ரங்க மார்த்தாண்ட” மற்றும் “வித்யா வஸுல” அஹம் என்ற இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபகாலமாக அவர் ப்ளாக் அண்ட் வைட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.