ஆரம்ப காலங்களில் இவர் நிறைய செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். பிறகு தனது திறமையின் மூலம் திரைப்படத்துறையில் நடிகையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.
நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார் ஆரம்ப காலங்களில் இவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.
புதிய தலைமுறை செய்தி சேனலில் நீண்ட நாட்கள் பணியாற்றி வந்தார். பிறகு தனது வசீகரமான பேச்சாளும் முக பாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலமே வெகுவாக மக்களை கவர்ந்தார்.
இந்த நிலையில் இவர் மக்களிடையே பிரபலமானதை தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக கல்யாண முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் அறிமுகமானார்.
இந்த சீரியலில் நிறைய இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இவருக்கு அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து விஜய் டிவியில் முக்கிய செலிபிரிட்டிகளில் ஒருவராக பிரியா பவானி சங்கர் திகழ்ந்தார்.
இதனை அடுத்து சின்னத்திரையில் மட்டுமே தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்த பிரியா பவானி சங்கருக்கு வெள்ளி திரைகளும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு மேயாத மான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.
பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து இளைஞர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தில் நடிகர் வைபோவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதனை அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி,ஹாஸ்டல், யானை, குறுதியாட்டம்,திருச்சிற்றம்பலம், கல்யாணம், கனிமயம் போன்ற நிறைய படங்களில் நடித்து வந்தார் பிரியா பவானி சங்கர் இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தது.மேலும் இவருக்கு நிறைய விருதுகளும் வழங்கப்பட்டது.
தற்சமயம் இந்தியன் 2 பொம்மை டிமான்டி காலனி டு போன்ற திரைப்படங்களில் நடித்த வருகிறார் ப்ரியா பவானி சங்கர் இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் உடைய ஒரு நடிகை ஆவார்.
இவர் வெளியிடும் புகை படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.