சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள கிருத்திகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பான பைரவி என்ற திரில்லர் சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து பொன்னுஞ்சல் சீரியல், செலிபிரெட்டி கிச்சன் என்ற ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவகை வலம் வருகிறார்.
சின்னத்திரையில் கலக்கும் கிருத்திகாவுக்கு வெள்ளித்திரையுலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிகர் நிதின் சத்யாவின் மனைவியாக நடிகை கிருத்திகா லட்டு நடித்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் என்ற படத்திலும் கிருத்திகா நடித்துள்ளார்.
அதன்பின்னர் வெள்ளித்திரையில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்த கிருத்திகா தற்போது பிஸி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். பொதுவாகவே சீரியல் பிரபலங்கள் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பது வழக்கம்.
அந்தவகையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கிருத்திகா லட்டு விதவிதமான உடைகளில் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் ஸ்டைலிஷ் லுக்குடன் கூடிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சின்னத்திரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர்.
இந்த நிலையில் கிருத்திகா லட்டு தனது மகளுடன் சேர்ந்து லூட்டியடிக்கும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா என்று ஆச்சரியத்துடன் புகைப்படங்களை லைக் செய்து வருகின்றனர்.