4 வித்தியாசமான கதைகளை படமாக கொண்ட ஆந்தாலஜி படம்தான் லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகம் 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை கொண்டு தயாராகி வருகிறது. பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்வதுதான் படத்தின் கதை.
லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் மொத்தம் நான்கு கதைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாலிவுட் இயக்குநர்கள் இயக்குகிறார்கள். ஜோயா அக்தர், கரண் ஜோஹர், அனுராக் கஷ்யப் மற்றும் திபாகர் பேனர்ஜீ ஆகிய நான்கு பேர்தான் இந்த படத்தின் இயக்குநர்கள்.
இந்தப் படத்தில் பிரபல நடிகைகளான கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் திறமையான நடிகர்களான விஜய் வர்மா, நீனா குப்தா, அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா மற்றும் தில்லோடமா ஷோம் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி வரும் ஜூன் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ( Lust Stories 2) ஆந்தாலஜி சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.