கர்ப்பமாக இருக்கும்போது இப்படி டான்ஸ் ஆடலாமா -அட்வைஸ் பண்ணும் நெட்டிசன்ஸ்

post-img

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கும் பொது டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்யும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் விதவிதமான கமெண்டுகளுடன் காயத்ரிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். 

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் குழந்தைத்தனமான செயல்களின் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்து விருப்பமான சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 
 
சன் டிவி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகையாக மக்கள் மனதை கொள்ளையடித்த காயத்ரி நடனம் ஆடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். 
 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு காயத்ரி நடன கலைஞர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் காயத்ரி மீண்டும் கர்பமாகியுள்ளார் என்ற தகவலை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
 
காயத்ரி இரண்டாவது முறை கர்பமானதற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் காயத்ரி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்வது வழக்கம்.
 
 
அந்தவகையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் காயத்ரி யுவராஜ் ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார். காயத்ரி யுவராஜ் குதித்து டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
 
தற்போது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் "கர்ப்பமாக இருக்கும்போது இப்படியெல்லாம் டான்ஸ் ஆடக் கூடாது" என்று கயாத்ரிக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். 
 

 

Related Post