நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கக்கூடிய திரைப்படம் மாவீரன் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அதிதி சங்கர் மிஷ்கின் சரிதா சுனில் யோகி பாபு பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கக்கூடிய இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார் இப்படி நிறைய நட்சத்திரங்களை கொண்டு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கக்கூடிய இந்த மாவீரன் திரைப்படம் எப்படி இருக்கிறது.
என்பதை பார்க்கலாம் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஒரு காமிக் ஆர்ட்டிஸ்ட் ஆக பணத்தில் தோன்றுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வகையில் காமிக் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கும் இவர் வரைந்து உருவாக்கிய ஒரு கதாபாத்திரம்தான் மாவீரன்.
அநீதியை எதிர்த்து போராடி மக்களுக்கான நியாயத்தை வழங்கி மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடிய கதாபாத்திரமாக இந்த மாவீரன் கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார் சிவகார்த்திகேயன் இப்படி தன்னுடைய கதையில் மாவீரனை ஒரு தைரியமான வலுவான கதாபாத்திரமாக வடிவமைத்துக் கொண்டிருக்கும் சிவா தனது நிஜ வாழ்க்கையில் மிகவும் கோழையாக பயந்த சுபாவத்துடன் எந்த பிரச்சினை வந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்.
இப்படி இருக்கும் கதாநாயகன் சிவாவை தேடி அரசியல் ரீதியான சில பிரச்சனைகள் வருகிறது இந்த பிரச்சனையில் சிவகார்த்திகேயனுக்கு எமனாக இருக்கிறார். ஒய் எம் ஜெயக்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மிஷ்கின் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இல்லாமல் அவரை சுற்றி இருக்கக்கூடிய மக்களுக்கும் மிஸ்கினால் ஆபத்து இருக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை எப்படி காப்பாற்றிக்கொண்டார்.
சிவகார்த்திகேயன் மனதில் இருந்த மாவீரன் கதாபாத்திரம் எந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு உதவியாக இருந்தது உள்ளிட்டவற்றை நேர்த்தியாக படத்தில் காட்டி இருக்கிறார்கள் தனக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த அமைச்சர் மிஷ்கினை நடிகர் சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பதுதான் மீதி கதை.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை ஒரு ஆக்ஷன் நிர்வாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும் முன்னிறுத்தி இருக்கிறார் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்றாலும் கூட அந்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.
அதேபோல இந்த திரைப்படமும் ஆகிவிடுமோ என்ற ஒரு அச்சமும் ரசிகர் மத்தியில் இருந்தது ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் பயந்த சுபாவத்துடன் எந்த பிரச்சினை வந்தாலும் ஒதுங்கிப் போய்விடும் மனிதனாக இருக்கும் காட்சிகள் ஜனரஞ்கமாக காட்சியோடு காட்சியாக ஒன்றி படத்தோடு பயணிக்க உதவுகின்றது.
அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் காட்சிகள் ரசிகர்களை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்துகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் உருவாக்கிய மாவீரன் என்ற கதாபாத்திரத்தின் குரல் தான் நடிகர் விஜய் சேதுபதி குரலாக படம் முழுதும் பயணிக்கிறது.
இந்த படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள் குறிப்பாக சுனிலின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது பலரும் பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் கூட திரைக்கதை ரசிகர்களை அசர வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
படத்தின் ஓட்டத்தில் அங்கங்கே சில வேகத்தடைகள் போன்ற தொய்வு இருந்தாலும் படத்தின் திரைக்கதை அதிலிருந்து நம்மை மீட்ககிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பு, விஜய் சேதுபதியின் குரல், படத்தை படமாக்கிய விதம், எடிட்டிங் என அனைத்து விஷயங்களும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.
சில இடங்களில் ஏற்பட்ட சலிப்புதட்டுவது போன்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்கி இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.