தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் இந்தியிலும் நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் குஷி படம் வெளியாகவுள்ளது.
பாலிவுட்டிலும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர்.
கோவை ஈஷா யோக மையத்தில் சமந்தா: தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களிலும் இந்தியிலும் நடித்து வருகிறார் சமந்தா. விஜய் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள சமந்தா, ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் நாயகியாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். நாக சைத்தன்யாவுடனான திருமணம், தொடர்ந்து விவாகரத்து, அரியவகை நோய் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் இவற்றால் தன்னுடைய கேரியர் பாதிக்காதவண்ணம் சமந்தா பார்த்துக் கொண்டார்.
பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்ததன்மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் சமந்தா. இவரது அடுத்தடுத்த படங்கள் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில் சிட்டாடல் வெப் தொடரிலும் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இதன் பிரீமியர் ஷோவில் இந்த ஜோடி கலந்துக் கொண்டு மாஸ் காட்டியது. இந்தத் தொடரையும் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள நிலையில், விரைவில் இதன் அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் சினிமாவில் நடிப்பதில் இருந்து தற்போது சமந்தா இடைவெளி விட்டுள்ளார். இன்னும் ஒரு ஆண்டுகாலத்திற்கு அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்று தெரிகிறது.
தான் கமிட்டாகியிருந்த படங்களின் அட்வான்சையும் சமந்தா திருப்பிக் கொடுத்துள்ளார். இந்த காலத்தில் அவர் தன்னுடைய நோய் பாதிப்பிற்கு சிகிச்சை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு அவர் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமல் தான் தியானம் செய்யும் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
கோவை ஈஷா யோக மையத்திலிருந்தபடிதான் சமந்தா தியானம் செய்யும் புகைப்படங்களையும் மயில் உள்ளிட்டவை நிறைந்த சிறப்பான இயற்கை சூழல்களின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். மற்ற பக்தர்களுடன் இணைந்து அவர் தியானம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தியானமே தனது வலிமை என்றும் இந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் சமீப காலங்களில் ஆன்மீகப்பாதையில் அதிகமாக பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.