இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாகவும் ரிலீசாகவுள்ளது.
படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ஜெயிலர் ட்ரெயிலர்: நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே இணைந்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த ரவி என நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
படம் ரிலீசாக இன்னும் 8 தினங்களே உள்ளன. இதையொட்டி கடந்த சில வாரங்களாக படத்தின் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த 28ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், ரஜினி, ரம்யா கிருஷ்ணன், நெல்சன் உள்ளிட்ட பலரும் மேடையேறி படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்தப் படத்தில் இருந்து நெல்சனை நீக்க முன்னதாக விநியோகஸ்தர்கள் தன்னிடம் அறிவுறுத்தியதை ரஜினி பகிர்ந்தார்.