சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
மாமன்னன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக்குவித்தது.
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படம், தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.