பிறந்தநாளும், நிச்சயதார்த்தமும் ஒரே நாள்.. கப்பலில் கொண்டாடிய சீரியல் நடிகை !

post-img

செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷபானா. இவர் ஒரு வேலைக்காரியாக வந்து அந்த தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது கணவருடன் கப்பலில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

ஷபானா ஷாஜஹான் என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் நடித்துவரும் பிரபல இந்திய நடிகை ஆவார். இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார்.

மேலும் இவர் இந்த சீரியலுக்காகவே  பல விருதுகள் வாங்கி உள்ளார். பார்வதி கதாபாத்திரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரை கொண்டாடினர். இவருக்கென்று ஒரு அடையாளமாகவே செம்பருத்தி சீரியல் இருந்தது.

ஷபானா, ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி மும்பையில் படித்தார். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் 2016-இல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.

இவர் தீவிர விஜய் ரசிகை ஆவர் இவர் 2021 நவம்பர் 11 ம் நாள் விஜய் டிவியில் பாக்கியலஷ்மி தொடரில் நடித்த ஆரியன் என்பவரை 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களது ஜோடி கனகச்சிதமாக பொருந்தி அழகாய் இருக்கிறது.

ஷபானா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் ஷாபனாவிற்காகவே ரசிகர்கள் பார்க்க தொடங்கினர். இந்த சீரியல் தற்போது மக்களால் அதிகம் விரும்பி பார்க்க படுகிறது.

 

ஷாபனாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடபட்டது. இவரின் நிச்சயதார்த்த நாலும் அதே நாள் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரது தற்போது கப்பலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Related Post