சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த சூப்பர் அப்டேட்!

post-img

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அந்த திரைப்படம் சென்னையில் 800 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது இயக்கி வருகிறார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.

அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

அதனை தொடந்து கடந்த மே மாதம் முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பை தொடங்கினர் படக்குழு. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைக்கா திட்டமிட்டு இருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சந்திரமுகி - 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Post