துளி மேக்கப் இல்லாமல் சுற்றி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை.. இன்ஸ்டா க்ளிக்ஸ்

post-img

இவர்கள் வெளியில் வரும்போதும் மேக்கப் உடன் தான் வருவார்கள். சமீபகாலமாக சில நடிகைகள் மேக்கப் இல்லாமல் வெளியில் வருவதால் இவர்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு கூடியுள்ளது.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்வாதி கொண்டே. கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட ஸ்வாதி, கன்னட திரைப்படங்களின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். கன்னடத்தில் சுமார் 4 திரைப்படங்களில் ஸ்வாதி கலக்கியுள்ளார்.

திரைப்படங்களில் ஸ்வாதிக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் அதே கன்னட சினிமாவில் 'யாரிவலு' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர். கன்னட சின்னத்திரையில் கலக்கிய ஸ்வாதி பின்னர் தமிழ் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இவரது கதாபாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டத்தை கொண்டார். இவருக்கு பூர்விகம் கன்னடம் என்பதால் இவருக்கு தமிழில் டப்பிங் செய்து வந்தவர் மீனா லோச்சனி  என்பவர். இவர் ஸ்வாதிக்கு மட்டும் இல்லாமல் இன்னும் பல சீரியல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வாதி கொண்டே 'பிரியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ப்ரியாவுக்கு அவரின் வாய்ஸ் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர் எதார்த்தமான நடிப்பு, இவரது கதாபாத்திரத்தின் குணம் என மக்களுக்கு இவரை பிடிக்க காரணம் ஆகி விட்டது.

ஸ்வாதி கொண்டே சமீப காலமா மேக்கப் இல்லாமல் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இயற்கையாகவே அழகா இருக்கீங்க என கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அல்லி தெளித்து வருகிறார்கள்.

Related Post