இன்றே கடைசி நாள்.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணாதீங்க.. உடனே விண்ணப்பிங்க

post-img
சென்னை: இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்கி வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய (டிசம்பர் 26) கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒருபகுதியாக எட்ஜ்வெர்வ் (Edgeverve) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக நீங்கள் மாறலாம். இந்நிலையில் தான் Edgeverve நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி Edgeverve நிறுவனத்தில் புராடெக்ட் டெவலப்பர் (Product Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2024ம் ஆண்டில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களாக இருப்பின் விண்ணப்பம் செய்யலாம். அதாவது பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு சி+ அல்லது Node.js அல்லது ஜாவா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் குறித்த எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Edgeverve இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 26 (இன்று) கடைசி நாளாகும். இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு டிசம்பர் 30ம் தேதி ஆன்லைனில் Coding Assessments இருக்கும். இதுபற்றிய விபரம் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் என்று 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். எந்த இடமாக இருந்தாலும் கூட விண்ணப்பத்தாரர்கள் அலுவலகம் சென்று பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இதனால் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி அடைவோருக்கு சென்னை அல்லது பெங்களூரில் நேர்க்காணல் என்பது நடக்கும். அப்போது Live coding என்பது நேர்க்காணலின் ஒருபகுதியாக இருக்கும். இதனால் அதற்கு தயாராக செல்ல வேண்டும். இந்த நிறுவனத்தில் 6 மாதத்துக்கு ஏதேனும் இண்டர்வியூவில் பங்கேற்று இருப்பவர்கள் இந்த முறை பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post