ரெடியா? கோவை காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

post-img

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனங்களின் ஒன்றாக காக்னிசண்ட்டில்(Congnizant) இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது இன்ப்ரா ஆர்க்கிடெக்ட் (Infra. Architect) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு இளநிலை பிரிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு Azure DevOps Pipeline, zUnit, UCD, Topaz workbench, Topaz for Total Test, Mfautomation - IBMSysAutomation, MF Storage admin - IBM, MF automation - IBM AFOper, MFautomation - CA Ops/MVS, Mainframe SCM admin - ISPW திறமையை கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் IDz, GIT DBB, Jenkins, MF Storageadmin- Hitachi,MF Storage admin - EmC, Mainframe SCM adm - Changeman, MainframeSCM Adm - Endevo, z/OS network admin, z/OS Administration உள்ளிட்ட திறமையை கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Cognizant நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்வதற்கான தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. .
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post