சென்னை-க்கு வந்த ஜப்பான் நிறுவனம்.. 2000 கோடி முதலீடு, 2000 பேருக்கு வேலை..!

post-img

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனம் அமைக்க உள்ள இப்புதிய தொழிற்சாலைக்காக சுமார் 1,891 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டில் 100 சதவீத தொகையை அன்னிய நேரடி முதலீட்டின் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனம் இந்த புதிய உற்பத்தி தளத்தை சுமார் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ளது மட்டும் அல்லாமல் இந்த தொழிற்சாலையில் சுமார் 2,000 பேரை நேரடியாக பணியில் அமர்த்த உள்ளது இந்த ஜப்பான் நிறுவனம். இந்த தொழிற்சாலையில் ஒரு சிறப்பு மிக்க விஷயம் உள்ளது.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா சென்னைக்கு அருகில் முதலீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட போது இத்தொழிற்சாலைகளில் ஏறக்குறைய 60 சதவீத ஊழியர்களை பெண்களை பணியில் அமர்த்துவதற்கு நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பணியில் அமர்த்தப்படும் பெண்களுக்கு போதுமான பயிற்சி மற்றும் கற்றல்-ஐ அளிக்கவும் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தமிழ்நாட்டின் முக்கிய எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனங்களின் மையமாக இருந்து வருகிறது, இப்போது இப்பகுதியில் ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்து மூலம் இப்பகுதியின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

                           சென்னை-க்கு வந்த ஜப்பான் நிறுவனம்.. 2000 கோடி முதலீடு, 2000 பேருக்கு வேலை..! #Mitsubishi

ஆந்திரப் பிரதேச மாநிலம் சென்னை துறைமுகத்துடன் தொடர்புடைய வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்ன தமிழ்நாடு எல்லைக்கு அருகில் உள்ள ஸ்ரீ சிட்டி தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ சிட்டியை ஒட்டி அமைந்துள்ள கும்மிடிப்பூண்டியில் ஒரு இன்டஸ்ட்ரியல் கிளஸ்டரை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

 மேலும், இந்த பகுதியில் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்கள் குறைந்த செலவு மற்றும் வளமான தொழிலாளர் வளங்கள் மூலம் பயனடைய முடியும். இதேபோல் இப்பகுதியில் தொழிற்சாலைகளை ஈர்க்க மாநில அரசு பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இப்புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா இப்புதிய தொழிற்சாலையில் முதல் கட்டமாக ரூம் ஏர் கண்டிஷனர் (ஆர்ஏசி) மற்றும் கம்ப்ரஸர் தயாரிக்க உள்ள நிலையில் வரும் காலத்தில் Precision Air Conditioning (PAC) and Variable Refrigerant Flow (VRF) ஆகியவற்றை தயாரிக்க உள்ளது. இதோடு இந்த தொழிற்சாலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தையும் அமைக்க உள்ளது மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா. இந்த தொழிற்சாலை அக்டோபர் 2025 க்குள் செயல்படத் தொடங்கும்.

Related Post