டிகிரி போதும்.. சென்னையிலேயே ஐடி வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

post-img
சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து ஃபுல் ஸ்டாக் இன்ஜினியர் (Full Stack Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். சென்னையில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எச்சிஎல், காக்னிசண்ட், ஆக்சென்ச்சர், ஜோஹோ உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வருகிறது. அதேபோல் ஐடி துறையில் உள்ள நிறுவனம் தான் Dot Com Infoway. இந்த நிறுவனம் என்பது Product Based AI நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி டாட் காம் இன்ஃபோவே நிறுவனத்தில் இருந்து ஃபுல் ஸ்டாக் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய பிரிவில் இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் டெக்னிக்கல் ரீதியாக பார்த்தால் C#, Python, Typescript உள்ளிட்ட லேங்குவேஜ்கள் தெரிய வேண்டும். ஃப்ரேம்வொர்க்ஸ்ஸை எடுத்து கொண்டால் .NET Core, Angular, Node.JS உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். டூல்ஸ் என்றால் Azure, Kubernetes, GitHub உள்ளிட்டவற்றில் மாஸ்டராக இருக்க வேண்டும். மேலும் பேக் எண்ட் மற்றும் ஃப்ரண்ட் என்ட் வெப் டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெவலப்மென்ட், ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் டாஸ்க்குகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் CSS என அழைக்கப்படும் Cascading StyleSheets ஸ்கில்ஸ், டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றி தெரிவிக்கப்பட உள்ளது. அதேபோல் பணிக்கான அறிவிப்பு வெளியாகி 2 நாட்கள் ஆகிறது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post