கிருஷ்ணகிரியில் பிரமாண்ட தொழிற்சாலை.. ஓலா நிறுவனத்தின் அடுத்த மூவ்..!

post-img

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓலா நிறுவனம் தற்போது புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது. இது வரையிலும், ஓலா கேப்ஸ், ஓலா இ-ஸ்கூட்டி போன்ற தயாரிப்புகள் மூலம் தனக்கென்று தனி வாடிக்கையாளர் கூட்டத்தை ஓலா நிறுவனம் சம்பாதித்துள்ளது.

இதன் மூலம் ஓலா நிறுவனத்தின் சந்தை மதிப்பும் கூட தொடங்கியது. இந்நிலையில், தற்போது மிகப்பெரும் ஜாம்பவான் துறையான செல் தொழிற்சாலை துறையிலும் ஓலா நிறுவனம் கால் பாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓலா நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனத்தின் முதல் செல் தொழிற்சாலையை ஏற்கனவே நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது. சுமார் 115 ஏக்கரில் நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலையானது அடுத்த ஆண்டு முதல் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என்றும், இதன் ஆரம்ப திறன் என்பது 5 GWh திறன் கொண்டு இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதன் பின்னர், படிப்படியாக 100 GWh வரை விரிவாக்கம் செய்யப்படுமாம். ஓலா நிறுவனத்தின் இந்த திட்டம் வெற்றி அடைந்தால், இந்தியாவின் மிகப்பெரிய செல் தொழிற்சாலையாக இது மாறும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் உலகின் மிகப்பெரிய செல் உற்பத்தி நிலையமாகவும் இது மாறும் என்றும் தெரிகிறது. இந்த திட்டம் நிச்சயம் செல் உற்பத்தியில் புதிய புரட்சியை கொண்டு வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செல் தொழிற்சாலை நிறுவுவதற்கான இந்த திட்டம் குறித்து ஓலா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் கூறுகையில், “எங்களது இந்த ஜிகா ஃபாக்டரியின் முதல் படியை  நிறுவி உள்ளது பெருமையாக உள்ளது. எங்களது ஜிகாஃபாக்டரி இந்தியாவின் மின்மயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். மேலும் எங்களது இந்த முயற்சியானது இந்தியாவை உலகளாவிய எலெக்ட்ரிக் வாகனங்களின் மையமாக மாற்றுவதற்கு வழி வகுக்கும்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஜிகா ஃபாக்டரியின் நோக்கம் குறித்து கேட்டபோது, 'தங்களது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது எலெக்ட்ரிக் வாகனங்களின் அனைத்து முக்கிய கூறுகளையும் உள்ளூர் மயமாக்குவதும், இந்தியா நாட்டில் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதும்' என்று பவிஷ் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், ஓலா நிறுவனம் செல் மற்றும் பேட்டரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சமீப காலமாக அதிக முதலீட்டை செலுத்தி வருகிறது.

இதன் மூலம் மிகவும் முக்கியமான தவிர்க்க முடியாத இடத்தை எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஓலா நிறுவனம் பிடிக்க உள்ளது. இதற்காக உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையத்தை பெங்களூரில் ஓலா நிறுவனம் அமைத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓலாவின் பேட்டரி கண்டுபிடிப்புகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Post