தமிழ்நாட்டில் சமூக நலத்துறையின் கீழ் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் ‛ஒன் ஸ்டாப் சென்டர்' இயங்கி வருகிறது. இங்குள்ள காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகளோடு நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது கோவை சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலின் ஒன் ஸ்டாப் சென்டரில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி Case Worker, Security மற்றும் Multi Purpose helper ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் Case Worker பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Social Worker (MSW - PG) பிரிவில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். செக்யூரிட்டி மற்றும் மல்டி பர்பஸ் ஹெல்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு பாஸ் அல்லது 10ம் வகுப்பு பெயில் ஆகியிருந்தால் விண்ணப்பம் செய்யலாம். இந்த 3 பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் கோயம்புத்தூரை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் கேஸ் வொர்க்கர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். செக்யூரிட்டி பணிக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், மல்டி பர்பஸ் ஹெல்பர் பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.6,400 சம்பளமாக வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அனுப்பி வைக்கும்போது அசல் சான்றுகளை அனுப்ப கூடாது. நகல் சான்றுகளை மட்டுமே அனுப்ப வேண்டும். அதன்பிறகு தபாலில் அனுப்பிய சான்றிதழ்களை நேரில் கொண்டு செல்ல வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை District Social Welfare Officer, District Collectorate Campus, Old Building Ground Floor, Coimbatore 641 018 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சந்தேகங்கள் இருப்பின் 0422 - 2305156 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here