சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து சென்னை, மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று TCS எனும் Tata Consultancy Services. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு: டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது React JS node Js Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்கவேண்டும். மேலும்Hand on ReactJS, Redux, Express JS, Node.js, HTML5, CSS3, LESS, JavaScript, jQuery உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர AngularJS, Angular 2+, Bootstrap. Secure coding standard (OWASP) Technically sound. Should be able to provide solutions, Agile உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் மற்றும் அனலிசிஸ் திறமை இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here