சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோவில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேவையான தகுதிகள் என்னென்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஜோஹோவில் இருந்து தற்போது அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போதைய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
ஜோஹோவில் தற்போது அப்ளிகேஷன் செக்யூரிட்டி இன்ஜினியர்ஸ் (Application Security Engineers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஸ்கில் செட்டாக செக்யூரிட்டி பிரேம்வொர்க்ஸ், அப்ளிகேஷன் செக்யூரிட்டி டூ்ல்ஸ், வெப் செக்யூரிட்டி, ஏபிஐ செக்யூரிட்டி, வல்னரபிலிட்டி அசஸ்மெண்ட் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
அதேபோல் ப்ரோகிராமிங் மற்றும் ஸ்கிரிப்டிங்கை பொறுத்தவரை பைத்தான், ஜாவா, சி/சி++, Go (Any programming basic understanding) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அதேபோல் தனிஆளாக (Independently)பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கு தற்போது ஜோஹோவில் பணியாற்றுவோர் மற்றும் 2025ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்கள் ஆகியோர் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மற்றவபடி மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
Weather Data Source: Wettervorhersage 21 tage