வங்கியில் வேலை.. மாதம் 85 ஆயிரம் வரை சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

post-img

சென்னை: கர்நாடக வங்கியில் காலியாக உள்ள ப்ரோபேஷனரி அதிகாரி (ஸ்கேல்-I)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் மங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கர்நாடகா வங்கி தனியார் வங்கி நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் 915 வங்கி கிளைகளுடன் இந்த கர்நாடக வங்கி இயங்கி வருகிறது. தமிழகத்திலும் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.
அந்த வகையில் தற்போது, கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ப்ரோபேசனரி அதிகாரி (ஸ்கேல் -I) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் தேர்வு அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.
கல்வி தகுதி: ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவது ஒரு முதுகலை பட்டம் அல்லது வேளாண் அறிவியல் பிரிவை எடுத்து டிகிரி முடித்தவர்கள், 5 ஆண்டுகள் கொண்ட சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு: 01.11.2024 தேதிப்படி அதிபட்ச வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்னப்பதாரர்கள் 02.11.1996 க்கு முன்பாக பிறந்தவராக இருத்தல் கூடாது. எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு மட்டும் வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகல் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை வழங்கப்படும். விதிகளின் படி அகவிலைப்படி, ஹெச்.ஆர்.ஏ உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் வழியில் எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியிலான தேர்வு 22.12.204 (உத்தேச தேதி) நடத்தப்படும். பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, மங்களூர், தர்வாத்/ ஹுப்பளி, மைசூரு, ஷிவ்மோக்கா, கல்பர்க்கி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
ஆன்லைன் டெஸ்டில் தேர்வு பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் பின்னர் அறிவிகப்படும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 'இண்டக்ஷன் பயிற்சி திட்டம்'(Induction Training Programme') மங்களூரில் உள்ள பணியாளர்களுக்கான கல்லூரியில் நடைபெறும். இதை வெற்றிகரமாக முடித்த பிறகு பணியாளர், வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.700 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 10.12.2024 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ள https://karnatakabank.com/careers இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Related Post