சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 ஆயிரம் முதல் 1,16,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு முதல் என்ஜினியரிங் கல்வி தகுதி கொண்ட பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோயில்களில் ஏற்படும் நிர்வாக பணிகள் உள்ளிட்டவற்றை நிரப்புதல் ஆகியவையும் அறநிலையத்துறையே மேற்கொள்கிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும்.
அந்த வகையில் தற்போது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
இளநிலை உதவியாளர் - 7
சீட்டு விற்பனையாளர் -13
சத்திரம் காப்பாளர் - 16
சுகாதார மேஸ்திரி -04
பூஜை காவல் - 1
காவல் - 44+2
துப்புரவு பணியாளர் - 104
துப்புரவு பணியாளர் மலைக்கோயில் - 57
கால்நடை பராமரிப்பு - 02
உதவி யானை மாவுத்தர் -1
சுகாதார ஆய்வாளர் - 1
தொழில் நுட்ப பணிகள்
உதவி பொறியாளர் (எலக்ட்ரிகல்) - 1
உதவி பொறியாளர் (சிவில்) - 04
இளநிலை பொறியாளர் (மின்) -1
இளநிலை பொறியாளர் (ஆட்டோ மொபைல்) - 1
இளநிலை பொறியாளர் (மெக்ட்ரோனிக்ஸ் ரோபோட்டிக்ஸ்) - 1
மேற்பார்வையாளர் (சிவில்) - 3
மேற்பார்வையாளர் (இயந்திரவியல்) - 3
தொழில் நுட்ப உத்வியாளர் (மின்) - 2
தொழில் நுட்ப உதவியாளர் (இயந்திரவியாளர்) - 1
கணிணி இயக்குபவர் - 3
டிரைவர் - 2
என மொத்தம் 39 வகையான பணியிடங்களில் 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். இளநிலை உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும். காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. டெக்னிக்கல் பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி, பணியிடங்கள் பற்றிய விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளம் பணிக்கு தகுந்தபடி மாறுபடும். இளநிலை உதவியளர் பணிக்கு மாதம் ரூ.18,500 - 58,600 வரை வழங்கப்படும். இன்ஜினியரிங் கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ. 36,700- 1,16,200 வரையும் சம்பளம் வழங்கப்படும். டிரைவர் பணிக்கு 18,500 - 58,600 வரை கிடைக்கும். ஹெவி லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயதுக்குப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?: போதுமான கல்வி தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை http://www.palanimurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ண படிவத்தினை கோயில் அலுவலகத்தில் நேரிலோ, தபால் வழியாகவோ கொடுக்கலாம். விண்ணப்பங்க்ள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 8.01.2025 ஆகும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி - 624 601,
திண்டுக்கல் மாவட்டம்.
இதர நிபந்தனைகள்: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். விண்னப்ப படிவத்துடன் கல்வி தகுதி சான்றிதழ்கள், ஆதார் அடையாள சான்று உளிட்டவற்றின் நகல்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
Weather Data Source: Wettervorhersage 21 tage