டிச.17 கடைசி நாள்.. ZOHO நிறுவனம் வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு.. சென்னை, மதுரை, தென்காசியில் பணி

post-img
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 17 ம் தேதி கடைசி நாளாகும். தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஜோஹோ நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள். தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது 2014 முதல் படிப்பை முடித்தவர்கள், 2025ம் ஆண்டு வரை படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் 0-2 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில தகுதிகள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி, சி++ மற்றும் ஜாவா உள்ளிட்டவற்றில் நல்ல ஸ்கில்ஸ் பெற்றிருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 17ம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ என்பது திருநெல்வேலியில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஜோஹோ நிறுவனத்தில் வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். தற்போதைய சூழலில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசியில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த லோகேஷன்களில் உள்ள அலுவலகங்களில் நியமனம் பெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது ஜோஹோவில் அடுத்தடுத்து இண்டர்வியூக்களை அட்டென்ட் செய்வோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம். மீறும்பட்சத்தில் பணிக்கு தேர்வானாலும் கூட அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post