பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனிடம் ஒரு நபர் கையெழுத்து வாங்குவதற்காக லஞ்சம் கொடுக்கிறார்.
அதே நேரத்தில் முல்லையிடம் தன்னுடைய வளைகாப்பு நடக்காததற்கு காரணம் கதிர் தான் என்று சொல்லி ஐஸ்வர்யா திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஜூன் 9ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி நீங்க பேங்க்ல கடன் வாங்குனவங்க கூட இரண்டு அடியை போட்டுட்டு போயிட்டாங்க. ஆனா நான் இப்போ பணம் கடன் வாங்கி இருக்கவங்க அப்படி கிடையாது. வீட்டு வாசல்ல நின்னு மானங்கெட்ட கேள்வி கேப்பாங்க என்று கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் மிரட்டிகிட்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் முல்லை வந்து என்ன ஆச்சு? கத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க, அதற்கு ஐஸ்வர்யா அது தம்பி நல்லா படிக்கலையாம். அதுக்கு தான் திட்டிக்கிட்டு இருக்காங்க என்று சொல்லி சமாளிக்கிறார். பிறகு முல்லை போனதும் ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யாவை திட்டுகிறார். நீங்க கடன் வாங்குனத நான் முல்லை கிட்ட சொல்லவா? சொன்னா என்ன நடக்கும்னு தெரியும என்று மிரட்டுகிறார்.
பிறகு உங்களுக்காக நான் தெருவில் நிற்க முடியாது. உன் தலையை அடையமானம் வச்சாவது நீ கடனை தந்துவிடுவேனு சொன்னாலா? நாளைக்கு எனக்கு பணம் வேணும். முழுசா தர முடியலனாலும் கொஞ்சம் கொஞ்சமா தர பாரு. இல்லன்னா நடக்கறதே வேற என்று அத்தாச்சி மிரட்டிக்கொண்டு வெளியே வர இதை எல்லாம் கேட்டபடி முல்லை வாசலில் நிற்கிறார்.
பிறகு முல்லை ஐஸ்வர்யாவின் சித்தி இடம் ஏதும் பிரச்சனையா? என்று கேட்க, இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் கிளம்புறேன் தனம் கிட்ட சொல்லிருன்னு ஐஸ்வர்யாவின் சித்தி கிளம்புகிறார். ஆனால் முல்லைக்கு சந்தேகம் தீராமல் யோசித்தபடி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கண்ணன் பேங்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் ஒரு நபர் லோன் வாங்க வேண்டும் என்று வர, அவரிடம் எல்லாம் சரியாக இருக்கிறது. ஒரே ஒரு டாக்குமெண்ட் மட்டும் மிஸ் ஆகி இருக்கிறது. அது கண்டிப்பா வேணும் என்று சொல்ல, அவர் பணம் கொடுக்க முயற்சி செய்ய, எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று திட்டி அனுப்பி விடுகிறார். பிறகு வெளியே இருக்கும் கிளர்க்கிடம் அந்த நபர் சொல்ல அவர் நான் கையெழுத்து வாங்குகிறேன் என்று அந்த பணத்தை வாங்கிக் கொள்கிறார்.
பிறகு அந்த கிளர்க் இது எனக்கு தெரிஞ்சவங்க. நீங்க ஒரு கையெழுத்து போட்டு கொடுக்கலாம் என்று சொல்ல, சரி என்று கண்ணனும் கையெழுத்து போட்டு கொடுக்க, அந்த பணத்தை டேபிளில் வைத்து விட்டு கிளர்க் செல்கிறார். எனக்கு இது வேண்டாம் எடுத்துட்டு போங்க என்று கண்ணு சொன்னாலும் இல்ல சார் வச்சுக்கோங்க என்று கிளர்க் போய் விடுகிறார். அப்போது இந்த பணத்தை வேண்டாம் கொடுத்துவிட வேண்டும் என்று கண்ணன் யோசிக்க, அதே நேரத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி பணம் கண்டிப்பா வேணும் என்று சொன்னதெல்லாம் நினைத்து பார்க்கிறார்.
அதே நேரத்தில் ஜீவா வெளியே ஒரு இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு நிற்க அந்த இடத்திற்கு மூர்த்தியும் வருகிறார். பிறகு இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போ ஜீவா நான் இன்னும் நாலைந்து மாதத்திற்குள் நம்ம வீட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து கண்ணன் ஆபீசிலிருந்து கிளம்பும்போது அந்த பணத்தை எடுத்து பார்த்து இதை கொடுத்துவிடலாம் நம்ம வச்சுக்க வேண்டாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா போன் செய்து கண்ணன் பணம் ஏதாவது ரெடி பண்ணிட்டியா? நம்ம தப்பு பண்ணிட்டோம். எப்படியாவது அத்தாட்சிக்கு பணம் கொடுத்துவிடனும். இல்லன்னா பெரிய பிரச்சனையாயிரும் என்று பேசுகிறார். கண்ணன் நான் எப்படியாவது பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்.
அதைத்தொடர்ந்து கண்ணனுக்காக வாசலில் ஐஸ்வர்யா காத்துக் கொண்டிருக்க, அந்த நேரம் வரும் தனம் இதில் உக்காரு எதுக்கு நின்னுகிட்டு இருக்க என்று சொல்ல ஐஸ்வர்யா உட்கார்ந்து இருக்கிறார். அப்போது வளைகாப்பு பற்றி தனமும் முல்லையும் பேச, அது கதிர் மாமாவால தானே நின்னு போச்சு என்று ஐஸ்வர்யா கூற முல்லை கடும் கோபம் ஆகிறார்.
கதிர் மாமா அந்த பேங்க் ஆளுங்களை எல்லாம் அடிக்காம இருந்திருந்தா வளைகாப்பு நல்லபடியா நடந்து இருக்கும் என்று சொல்ல, முல்லை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா அந்த வீட்டிற்கு வர என்ன ஆச்சு என மீனா கேட்க, ஐஸ்வர்யா சொன்னதை முல்லை சொல்ல, நீங்க வளைகாப்புக்காக மண்டபத்துக்கு எல்லாம் கொடுத்த பணத்தை வாங்கிட்டீங்களா? என்று மீனா கேட்க, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்து பேசாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.