முதல் முறை தன்னுடைய காதல் கணவர் சஞ்சீவ் பார்த்ததும் ஏற்பட்ட நெகிழ்ச்சி குறித்து அதில் மனம் திறந்து ஆலியா மானசா பேசியிருக்கிறார்.முதல் சீரியலில் காதல் திருமணம் செய்வதற்கு காரணம் இதுதான் என்று ஆலியா சொன்ன காரணத்தை கேட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த ஆலியா மானசா இளைஞர்களின் பேவரைட் கதாநாயகிகளின் வரிசையில் இடம் பிடித்திருந்தார். ஆனால் திடீரென்று முதல் சீரியலிலே அவரோடு கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்து விட்டார். பொதுவாக சின்னத்திரை சீரியல்கள் என்றால் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் பார்ப்பார்கள். ஆனால் ராஜா ராணி சீரியலில் செம்பாவுக்காகவே அதிகமான இளைஞர்கள் சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தார்கள். அந்த அளவிற்கு செம்பா கேரக்டரில் ஆலியா மானசா பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
வீட்டு வேலைக்கார பெண்ணாக இருக்கும் செம்பா முகத்தில் எப்போதும் மேக்கப் போடு இருந்தாலும், அதையெல்லாம் சட்டை செய்யாத ரசிகர்கள் அவர் அந்த வீட்டில் சின்னையாவை காதலிப்பதை மட்டும்தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புலம்பி வந்தனர். ஆனால் சீரியலை தாண்டி இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பலர் மனதை தேற்றிக்கொண்டு இவர்களுக்கு வாழ்த்து கூறி வந்தனர். இந்த நிலையில் தன்னுடைய காதல் கதை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆலியா மானசா பேசியிருக்கிறார். அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து தங்களுடைய மனக்குமுறல்களை கருத்துக்களாக வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஒரு முறை சஞ்சீவை சூட்டிங் ஸ்பாட்டில் ஆலியா சந்தித்திருக்கிறார். அப்போது ஆலியா மாடலிங் தான் செய்து கொண்டிருந்தாராம். விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது சஞ்சீவை பார்த்ததும் இவர் ரொம்ப அழகாக இருக்கிறதே என்று இவர் வியந்து போயிருந்தாராம்.
பிறகு சஞ்சீவ் இடம்," வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் அண்ணா" என்று ஒரு கேள்வியை கேட்டாராம். ஏற்கனவே சஞ்சீவ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்ற தகவலை கேட்டு அவரிடம் இந்த கேள்வியை கேட்டேன் என ஆலியா கூறியிருக்கிறார். அதற்கு பிறகு பல மாதங்கள் கழித்து ராஜா ராணி சீரியலுக்கான சூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சீவ் வந்திருக்கிறார். அப்போது ஆலியாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம்.
இந்த நேரத்தில் உங்களுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகர்கள் வந்திருக்கிறார்கள் யாரோடு கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று பார்ப்பதற்காக என்று ரிகர்சல் பார்த்திருக்கிறார்கள். அப்போது இன்னொரு கதாநாயகனுக்கு ஆலியாவுக்கும் செட்டாகவில்லையாம். ஆனால் சஞ்சீவிக்கும் இவருக்கும் ரிகசலில் காம்பினேஷன் சூப்பராக இருக்கிறது என்று பார்த்தவர்கள் சொன்னார்களாம். இவருக்கு மனதிற்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்ததாம்.
அதற்குப் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் கமிட்டான பிறகு சூட்டிங் ஸ்பாட்டில் முதல் நாள் சஞ்சீவிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும்போது இவர் அப்படியே கண்ணிமைக்காமல் சஞ்சீவ்வை பார்த்துக்கொண்டே இருந்தாராம். அப்போது சஞ்சீவ் என்னாச்சு என்று ஆலியா இடம் கேட்க, அதற்கு பிறகு தான் அவருக்கே சுயநினைவு வந்ததாம். ஐயையோ இப்படி கூட நடிக்கும் நபரை இப்படி பார்த்துக்கிட்டு இருக்கோமே இனி என்ன நினைப்பாங்க என்று எனக்கு தோன்றியது. அப்புறம் நான் அசடு வழிந்தபடியே அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். பிறகு இருவரும் ஒன்றாக சீரியலில் நடிக்கும் போது எங்களுக்கு ஏற்பட்ட புரிதல் மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மையால் தான் நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
இப்போ வரைக்கும் திருமணம் செய்து கொண்டாலும் நாங்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறோம் எங்கள் இருவருக்கும் எந்த ஈகோவும் கிடையாது. ஏதாவது எனக்கு சொன்னால் கூட நான் அதை திருத்திக் கொள்வேன். சில நேரங்களில் நான் கோபப்பட்டால் சஞ்சீவ் சமாதானப்படுத்தி விடுவார். அல்லது சஞ்சீவ் கோவப்பட்டால் நான் சமாதானப்படுத்தி விடுவேன். இப்படித்தான் எங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது என்று ஆலியா மனசா கூறியிருக்கிறார்.