ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குழந்தைகள் கதிர், நட்சத்திரா வீடியோவை பார்த்து கொண்டிருக்க அருண் அங்கு வந்து போனை வாங்கும் சமயத்தில் செல்ஃபி பாட்டி அவனை கூப்பிட அருண் அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.
பிறகு நட்சத்திராவை மேடைக்கு கூப்பிட்டு ஆசிர்வாதம் செய்ய தேவையான அட்சதை தயார் செய்ய அரிசி மற்றும் மஞ்சளை கலந்து தர சொல்ல நட்சத்திராவும் இதை செய்ய மேலே இருந்து பார்க்கும் தீபா வருத்தம் அடைகிறாள்.
அதற்கு அடுத்ததாக அபிராமி இந்த அட்சதை அரிசியை மீனாட்சியிடம் கொடுத்து ரூமில் வைக்க சொல்ல அவள் கார்த்திக் தீபா கழுத்தில் தான் தாலி கட்டுவான், அதனால் தீபா தான் அட்சதை தயார் செய்ய வேண்டும் என முடிவெடுத்து தீபாவிடம் அரிசி மற்றும் மஞ்சளை கொடுத்து கலக்க சொல்ல தீபா பீல் செய்தவாறே கலந்து கொடுக்கிறாள்.
அடுத்து வீட்டில் இருந்து போன் செய்து இனியனுக்கு என்ன ஆச்சு என கேட்க சாதாரண மயக்கம் தான் என சமாளிக்கிறாள் தீபா. அதற்கு அடுத்ததாக பாட்டி கார்த்திக்காக விலையுயர்ந்த மோதிரம் வாங்கி இருப்பதாக சொல்லி மீனாட்சியிடம் காட்டி அதனை மேலே உள்ள ரூமில் வைக்க வருகிறார்.
ரூமில் தீபா இருப்பதால் மீனாட்சி பயப்பட பாட்டி வரும் நேரத்தில் தீபா ஒளிந்து கொள்கிறாள். பிறகு பாட்டி மோதிரத்தை வைத்து விட்டு சென்றதும் நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா அப்பா இதனை திருட தீபா தனது முகத்தை மறைத்து கொண்டு அவர்களுக்கு அடி கொடுத்து மோதிரத்தை மீட்க பாட்டி இதை பார்த்து விடுகிறார்.
உடனே தீபா தீபா என சத்தமிட மீனாட்சி ஷாக் ஆகிறாள். தீபா ஓடி சென்று ரூமுக்கு ஒளிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.