தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சாய் பல்லவி, தனது பள்ளி படிப்பை கோவையிலும், தனது மருத்துவ படிப்பை ஜோர்ஜியாவிலும் முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே டான்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட சாய் பல்லவி விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோ ஒன்றில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.
இந்த போட்டியில் சாய் பல்லவி வெற்றிக்கனியை பறிக்க தவறிவிட்டாலும், இந்த டான்ஸ் ஷோ மூலம் சூப்பர் சான்ஸ் ஒன்று சாய் பல்லவியை தேடி வந்தது. இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் உருவான 'ப்ரேமம்' படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவிக்கு சான்ஸ் கிடைத்தது.
பெரிய எதிர்பார்ப்பின்றி ப்ரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாளத்திலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி சாய் பல்லவியை ரசிகர்கள் ஆஹா ஓஹோ என கொண்டாடினர்.
மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக சாய் பல்லவிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் தேடி தேடி வந்தது. தமிழில் தியா, மாரி 2, கார்கி, என்.ஜி.கே என்று நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேடி பிடித்து நடித்து வருகிறார்.
மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக சாய் பல்லவிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் தேடி தேடி வந்தது. தமிழில் தியா, மாரி 2, கார்கி, என்.ஜி.கே என்று நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேடி பிடித்து நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது சாய் பல்லவி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தென்னிந்தியாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள சாய் பல்லவியின் டீன் ஏஜ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது சாய் பாலாவின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.