தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தனது மகன்களுடன் திருப்பதி சென்ற தனுஷ், தரிசனத்தை முடித்துவிட்டு மொட்டை தலையுடன் சென்னை திரும்பினார். இதனிடையே தனுஷின் 50வது படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருந்தன. இந்நிலையில், அபிஸியல் அப்டேட்டுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ரெடியாகிவிட்டாராம் தனுஷ்.
அவசரமாக தொடங்கும் தனுஷின் D 50: தனுஷ் லைன் அப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் காத்திருக்கின்றன. இதில் முதலாவதாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த வாரம் வெளியான கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்னொருபக்கம் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருந்தார் தனுஷ். தமிழ், தெலுங்கு உட்பட 3 மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. அதேநேரம் தனது 50வது படத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பவர் பாண்டிக்குப் பிறகு தனுஷ் இயக்கவுள்ள D 50 படத்தை அவரே இயக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, அமலா பால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட சென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் D 50, தனுஷ் கேரியரில் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக D 50 பட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட உள்ளதாம்.