ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் ரஜினி..

post-img

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சர்ச்சையான பாடல்: அந்த படத்தின் இரண்டாவது பாடலான Hukum இணையத்தில் புயலை கிளப்பியது. இந்த பாடலின் மூலம் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று, விஜய்க்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார் என்று சோஷியல் மீடியாவில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

1000 இலவச டிக்கெட்: இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு 1000 இலவச டிக்கெட்டுக்கான லிங்க்-ஐ சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. லிங்க் வெளியான 15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டது.

ரஜினி போட்ட ஆர்டர்: இந்நிலையில்,வலைப்பேச்சு அந்தணன் ஜெயிலர் படம் குறித்து பல சுவாரசியமான விஷயத்தை பேசி உள்ளார். அதில், ரஜினி தனது ரசிகர் மன்ற தலைவரிடம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் டிக்கெட் அனுப்பும் படி சொல்லி இருக்கிறார். இதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு புறம் சன் பிக்சர்ஸ் இலவச டிக்கெட்டுகளை கொடுத்துள்ளது. மறுபுறம் ரஜினி தனது ரசிகர்களை இசை வெளியீட்டுக்கு அழைப்பதற்கான வேலையை செய்துள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்: அண்மையில் ஜெயிலர் படத்தில் இருந்து Hukum பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த பாடலை எழுதிய பாடல் ஆசிரியருக்கு வாய்ஸ் நோட் அனுப்பி ரஜினி பாராட்டி இருக்கிறார். அப்போ ரஜினி முழுக்க முழுக்க அந்த வார்த்தகளை விரும்புகிறார் என்றுதான் அர்த்தம். அப்படி இருக்கும் போது, இசை வெளியீட்டு விழா மேடையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இதனால், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நிச்சயம் ரஜினி பேச வாய்ப்பு உள்ளது என் வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Related Post