சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் தனது இன்ஸ்டகிராமில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையவாசிகளை குஷிப்படுத்தி வருகிறார்.
Courtesy: instagram
டிக் டாக்கில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்து மிகவும் பிரபலமாவர் கேப்ரியல்லா. டிக் டாக்கில் பதிவிடும் வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி தமிழ் இளைஞர்களை திரும்பி பார்க்கவைத்த கேப்ரியல்லாவிக்கு சினிமாவில் நடிக்கவென்றுமென்ற ஆசை அதிகம்.
Courtesy: instagram
எப்படியாவது திரையில் தோன்றிவிடவேண்டும் என்ற ஆசையில், கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார். இந்த காமெடி நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்ப்பட்டு வெற்றிபெறவேண்டுமென முனைப்புடன் களம் இறங்கினர்.
Courtesy: instagram
காமெடி ஜாம்பவான்கள் மத்தியில் முழு முயற்சியுடன் களம் கண்ட கேப்ரியல்லாவிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்த நிகழ்ச்சியில் இறுதிசுற்றுக்கு முன்பே வெளியேற்றப்பட்டார் கேப்ரியல்லா. பின் மனம் தளராத கேப்ரியல்லா பட வாய்ப்புக்காக ஏறாத இடமில்லை கேட்காத வாய்ப்புகள் இல்லை, மீண்டும் கேப்ரியல்லாவிக்கு ஏமாற்றமே கிடைத்தது.
Courtesy: instagram
பட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வாய்ப்பு கேட்ட பல இடங்களில் நிறத்தை வைத்து ரிஜெக்ட் செய்தது தான் வேதனை. இருப்பினும் தொடர் முயற்சியை கைவிடாத கேப்ரியல்லாவிக்கு நல்ல சேதி கிடைத்தது.
Courtesy: instagram
இப்படத்திற்கு பின் சில படங்களில் நடித்த கேப்ரியல்லா, திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தார். ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் வாழ்க்கைக்குள் நுழைந்த கேப்ரியல்லா, நடிப்புக்கு சில காலங்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்.
Courtesy: instagram
2019 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஐரா' திரைப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கேப்ரியல்லாவின் நடிப்புக்கு பாராட்டு மழை குவிந்தது.
Courtesy: instagram
சினிமாவில் சில காலங்கள் தலையைக்காட்டாத கேப்ரியல்லா, திடீரென சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கேப்ரியல்லாவிக்கு சுந்தரி சீரியல் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Courtesy: instagram
சுந்தரி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான கேப்ரியல்லா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். வெள்ளையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும் என்றிருந்த பார்முலாவை தகர்த்தெறிந்தார் கேப்ரியல்லா.
Courtesy: instagram
தற்போது சீரியலில் கலக்கி வரும் கேப்ரியல்லா இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக அடிக்கடி மாடர்ன் உடையிலும், சேலையிலும் போட்டோஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கேப்ரியல்லாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்கவைத்து இன்ஸ்டாகிராமில் லைக் மற்றும் கமெண்டுகளை அள்ளி வருகிறது.